வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து ஆதிவாசிகளின் கலாச்சார நிகழ்வுகள்!!

969

 
வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி வவுனியா யங்ஸ்டார் மைதானத்தில் நேற்று (30.12) நடைபெற்றது. இப் போட்டிகளை பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

ஆதிவாசிகளுடன் வவுனியா மாவட்ட இளைஞர்கள் குழு, பொலிஸ் குழு, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் குழு மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் குழு போட்டியிட்டனர்.

இன் நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன், உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிய ஸ்ரீ பெர்ணான்டோ, வவுனியா பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி மஹிந்தவில்லு ஆராய்ச்சி மற்றும் ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வுகளில் இறுதியில் கலந்துகொண்ட அணிகளுக்கும் வெற்றபெற்ற அணிகளுக்கும் சான்றிதழ்களும் வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டதுடன் வெற்றிபெற்ற அணியினர் தமது வெற்றிக் கிண்ணத்தை ஆதிவாசிகளின் அணியினருக்கு ஞாபகமாக வழங்கினர்.

கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து ஆதிவாசிகளின் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இன் நிகழ்வுகளை பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

தொடர்புபட்ட செய்திகள் : வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளுடன் கிரிக்கெட் போட்டி!!