வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான செயலமர்வு!!

668

vavuniyaவவுனியா வடக்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச செயலமர்வுகளை வவுனியா வடக்கு கல்வி வலயமும் ஸ்மயில் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

மாணவர்களின் பெறுபேற்றின் அளவை அதிகரிக்கும் முகமாக செயற்படுத்தப்படும் இச் செயலமர்வில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கான செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 10 செயலமர்வு நிலையங்களில் இடம்பெற்று வரும் இச் செயலமர்வுகளை புலம்பெயர்ந்தோர் அமைப்பான ஸ்மயில் (புன்னகை) அமைப்பு வவுனியா வடக்கு கல்வி வலயத்துடன் இணைந்து செயற்படுத்தி வருகின்றது.