பிரித்தானியாவில் இலங்கைப் பெண்ணின் கைவண்ணம் : படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்!!

513

பிரித்தானியாவில் கடந்தாண்டில் சிறந்த உணவகமாக இலங்கையர்களினால் நடத்தப்படும் உணவகம் ஒன்று தெரிவாகியுள்ளது.

பிரித்தானியா Harrow பகுதியில் இலங்கையர்களினால் நடத்தப்படும் உணவகவே இவ்வாறு சிறந்த உணவமாக தெரிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

பொது வாக்கெடுப்பில் இந்த உணவகம் தெரிவாகியுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Field End வீதியின் Pinner பகுதியில் அமைந்துள்ள விருந்து என்ற பெயர் கொண்ட உணவகமே இவ்வாறு தெரிவாகியுள்ளது.

அந்த பகுதியின் பிரதான 3 உணவகங்களுடன் இறுதி சுற்றுக்கு தெரிவான இலங்கையர்களின் விருந்து உணவகம் சிறந்ததென தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் சுவை மிக்க உணவுகள் வழங்கப்படுவதன் ஊடாக வாடிக்கையாளர் அங்கு விரும்பி உணவு பெற்றுக் கொள்வதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.