வருடத்தின் ஆரம்பத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இலங்கைத் தாய்!!

691

 
2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தம்புள்ளை வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

தம்புள்ளை, பஹல ஹெரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதாகிய பியானி மலிகா என்ற பெண்ணே மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இவருக்கு பிறந்த 3 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 குழந்தைகளும், தாயும் உடல் நலத்துடன் இருப்பதாக தம்புள்ளை வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 வயதில் மகன் ஒருவர் உள்ளார். மேலும், கடந்த வருடம் ஆரம்பத்தில் கண்டி ஆதார வைத்தியசாலையில் பெண் ஒருவர் நான்கு குழந்தைகளை ஈன்றெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.