2018 ஆம் ஆண்டில் புறப்­பட்ட விமானம் 2017 ஆம் ஆண்டில் தரை­யி­றங்­கி­யது!!

586

எதைத் திரும்பப் பெற்­றாலும் போன உயி­ரையும் கடந்து போன நேரத்­தையும் ஒரு­போதும் மீளப்­பெற முடி­யாது என்று கூறு­வார்கள்.

ஆனால் 2018 ஆம் ஆண்டில் நியூ­ஸி­லாந்தின் ஆக்லான்டிலிருந்து புறப்­பட்ட விமா­ன­மொன்று 2017 ஆம் ஆண்டு ஹொன­லுலு விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கி புதுமை படைத்­துள்­ளது.

மேற்­படி ஹவா­யியன் எயார்லைன்ஸ் விமா­ன­மான எச்.ஏ.எல். புது வருட தினத்­திற்கு முதல் நாளான ஞாயிற்­றுக்­கி­ழமை பின்­னி­ரவு 11.55 மணிக்கு புறப்­ப­டு­வ­தாக ஆரம்­பத்தில் நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் மேற்­படி விமா­னத்தின் பயணம் சுமார் 10 நிமி­டத்தால் தாம­த­மா­னதால் அந்த விமானம் புது வருடம் பிறந்து 5 நிமிடம் கழித்து ஆக்­லான்­டி­லி­ருந்து பய­ணத்தை ஆரம்­பித்து ஹொன­லுலு விமான நிலை­யத்தை வந்­த­டைந்­துள்­ளது.

ஆக்­லான்­டிற்கும் ஹொன­லு­லு­விற்கு இடையில் 23 மணி நேர இடை­வெளி நில­வு­கின்­றது. இதன் பிர­காரம் அந்த விமானம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி காலை 10.16 மணிக்கு ஹொனலுலுவில் தரையிறங்கியுள்ளது.