கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா இன்று..

413

kochi

கொழும்பு  கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

காலை 8 மணிக்குத் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுவதுடன் விசேட திருப்பலிகள் பல இன்றைய தினம் காலையிலும் நண்பகலிலும் நிறைவேற்றப்படவுள்ளன.

கொழும்பு உயர் மறைமாவட்டத் துணை ஆயர் மெக்ஸ்வல் சில்வா ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படவுள்ளது.

மாலை 5.30 மணிக்கு கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி நடைபெறவுள்ளது.

இப்பவனி வழமை போன்று திருத்தல முன்றலில் ஆரம்பித்து வேளாங்கண்ணி மாதா ஆலய வீதி, கன்னாரத் தெரு ஜிந்துப்பிட்டி வீதி, விவேகானந்த மேடு வழியாக கொட்டாஞ்சேனை பிரதான வீதியையடைந்து அங்கிருந்து மீண்டும் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடையும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழாவின் இறுதி நிகழ்வாக திருச்சுரூப ஆசிர்வாதமும் இடம்பெறவுள்ளது.

புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெறுவதால் கொச்சிக்கடை, கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதி உள்ளிட்ட அதனை அண்டிய நகர்களில் விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.