சமந்தா அணிந்திருக்கும் அழகிய வைர மோதிரத்தின் மர்மம்!!

308

samanthaதமிழில் பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா, நடிகர் சித்தார்த்துடன் காதல் வயப்பட்டதாகவும், இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் அன்றாடம் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாத சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் சத்தமே இல்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீப காலமாக ஒரு அழகிய மோதிரம் ஒன்றை தனது இடது கையில் அணிந்து வருகிறாராம். இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பினால் அதற்கு மௌனத்தையே பதிலாக கூறுகிறாராம்.

ஆனால் கொலிவுட் வட்டாரத்தில் இவர் அணிந்திருக்கும் அந்த மோதிரத்தை அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அன்பளிப்பாக கொடுத்திருக்கமாட்டார்கள். அவருடைய காதலர் அளித்த அன்பு பரிசாகவோ அல்லது சமந்தாவின் நிச்சயதார்த்த மோதிரமாகவோ இருக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.