ரியல் எஸ்டேட் பிஸ்னஸில் கால்பதித்த ஆர்யா!!

276

Aryaதொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நடிகர் ஆர்யா தற்போது கோடிகளில் புரண்டு வருகிறார். தான் சம்பாதித்த பணத்தில் ஹோட்டல் பிஸ்னஸை ஆரம்பித்து சென்னையில் பல இடங்களிலும் நிறுவியுள்ளார். தற்போது மேலும் மற்றொரு பிஸ்னஸ் செய்யலாம் என்று யோசித்து வந்தவர் தற்போது ரியல் எஸ்டேட் பிஸ்னஸில் களமிறங்கியுள்ளார்.

அஜித்துடன் இவர் நடித்த ஆரம்பம் படத்திற்கு முதலில் இவருக்கு நான்கு கோடி சம்பளமாக பேசப்பட்டது. அதன்பின் படத்தில் இவருக்கு நெகட்டிவ் ரோல் என்பதால் சம்பளத்தை ஏற்றித்தருமாறு முரண்டு பிடித்தார். இறுதியில் அவருக்கு அப்படத்தில் நான்கரை கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது.

அந்த பணத்தை கேரளாவில் கொச்சின் அருகில் நிலத்தை வாங்கி அதில் முதலீடு செய்துள்ளாராம். கொச்சின் அருகில் உள்ள இடங்களுக்கு தற்போது மதிப்பு அதிகமாம். ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு கோடிக்கு வாங்கிய நிலம் இப்போது நான்கு கோடி வரை விலை போகிறதாம். அதனால் தமிழ்நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை தனது சொந்த மாநிலமான கேரளாவில் முதலீடு செய்து பிஸ்னஸை வளர்த்து வருகிறார் ஆர்யா.