வெளிச்சம் அறக்கட்டளையினால் மடு பிரதேச செயலகத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!!

459

 
மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய கிராமங்களான இரணை இலுப்பைக்குளம் மற்றும் கல்மடு படிவம் 2 ல் வசிக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தும் மிகவும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட பிள்ளைகளை தெரிவு செய்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (01.01.2018) வெளிச்சம் அறக்கட்டளையின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.எஸ்ஸ்ரீநிவாசன், வெளிச்சம் அறக்கட்டளையின் செயலாளர் கார்த்திக், வவுனியா பசங்க அமைப்பின் உறுப்பினர் வ.பிரதீபன், இரணை இலுப்பைக்குளம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் அ.றஜுவன், பூசாரிகுள கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சிவகுரு, சமுர்த்தி சங்க செயலாளர் திருமதி. ராஜேஷ்வரி , பெற்றோர்கள் , பிள்ளைகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.