நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வடிவேலு, கவுண்டமணி!!

536

vadivelu-kowndarவடிவேலுவும், கவுண்டமணியும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்கள். வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புது படங்களில் நடிக்கவில்லை. சொத்து தகராறு வழக்குகள் என சர்ச்சைகளில் சிக்கியதால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

தற்போது அவற்றில் இருந்து விடுபட்டு பல வருடங்களுக்கு பிறகு ஜகஜால புஜபல தெனாலிராமன் என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதில் நாயகியாக மீனாட்சி தீட்சீத் நடிக்கிறார். யுவாஜ் இயக்குகிறார். இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் போல் சரித்திர காமெடி கதையாக தயாராகிறது.

கவுண்டமணி வாய்மை என்ற படம் மூலம் மீண்டும் சினிமாவில் மறு பிரவேசம் எடுக்கிறார். கவுண்டமணி சினிமாவை விட்டு விலகி பல வருடங்கள் ஆகிவிட்டது. நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது வாய்மை என்ற படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

இப்படத்தில் சாந்தனு பாக்யாஜ், பிருதிவி, தியாகராஜன், ராம்கி, பூர்ணிமா பாக்யராஜ் போன்றோரும் நடிக்கின்றனர். நாயகியாக பானு வருகிறார். இப்படத்தை செந்தில்குமார் இயக்குகிறார்