திருமணமாகாத பெண் உயிரிழந்ததை அறியாதிருந்த தாயும் மகளும்!!

560

பிபிலை, வேகம கஹட்டகஹலவட்டன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் ஒன்று பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 52 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பிபிலை, வேகம கஹட்டகஹலவட்டன பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டில் 76 வயதுடைய தாயும் இரண்டு மகள்மாரும் வசித்து வந்ததாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

கடந்த சில காலமாக அவர்கள் மூவரும் ஒருவிதமான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அந்த வீட்டில் இருந்த 52 வயதுடைய மூத்தமகள் உயிரிழந்திருந்த நிலையில் தாயும் சகோதரியும் அதனை அறிந்திருக்கவில்லை.

குறித்த வீட்டிற்கு அருகாமையால் பயணிக்கும் போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் வீட்டை சோதனையிட்ட போது அந்தப் பெண் உயிரிழந்திருந்தமை தெரிய வந்துள்ளது.

பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பிபிலை வைத்தியசாலையின் ஊழியர்கள் வருகை தந்து சடலத்தையும் ஏனைய இரண்டு பெண்களையும் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.