இந்திய பிரஜை ஒருவர் தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இந்தியாவின் மும்பை நோக்கி அந்நபர் பயணிக்கவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரி தெரிவித்தார்.
சந்தேகநபரின் பையை சோதனையிட்டபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,194 கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி ஆறு மில்லியன் ரூபா என விமான நிலைய சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.





