வவுனியா ஓமந்தையில் இரண்டு துப்பாக்கியுடன் மூவர் கைது!!

813

வவுனியா பாலமோட்டைப் பகுதியில் நேற்று (08.01.2018) இரவு பொலிசாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இரண்டு கட்டுத் துவக்குடனும் மரை இறைச்சியுடனும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத்துவக்கு வைத்திருப்பதாக ஓமந்தை பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் அங்கு சென்ற ஓமந்தைப் பொலிசார் சுகந்தன், ஜெயதிலக்க, பிரதீப், நிஷாந்தன் ஆகியோரின் தேடுதலின்போது நால்வரில் மூவர் 41வயது, 45வயது, 72வயது ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் இவர்களிடமிருந்து இரண்டு கட்டுத் துப்பாக்கிகள் மற்றும் மரை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.