வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக சாலையில் பாதசாரிகள் கடவை இல்லாததால் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
கடந்த முதலாம் திகதியிலிருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச. சேவைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பாதசாரிக்கடவைகள் அமைக்கப்படவில்லை.
சுமார் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்துக்கு முன்பாக பாதசாரிக் கடவை இல்லை. இதன் காரணமாக பேருந்து நிலையத்துக்கு சாலையைக் கடந்து செல்லும் பயணிகள் சிரமக்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
விபத்து இடம்பெறலாம் என்ற பயத்துடன் சாலையைக் கிடைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்குப் பகுதிக்கான முதன்மையான கண்டி சாலையில் இரவு – பகலாக கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால் விபத்துகள் இடம்பெறும் அபாயம் அதிகம் காணப்படுகின்றது.








