வெறுத்த மனைவி மற்றும் கள்ளக்காதலி : உயிரைப் பறித்த காதல் போதை!!

932

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை தனது மனைவி மற்றும் கள்ளக்காதலி ஆகிய இருவரும் கைவிட்டு விட்டதால் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராமநாதன் என்பவருக்கு மேனகா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நில புரோக்கர் மற்றும் பிரபல கட்சியிலும் இணைந்து அதிக பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததால், குடிப்பழக்கம் மற்றும் தவறான பழக்கத்திற்கு அடிமையானார்.

இதனால் இவரது மனைவி தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிரிந்துசென்றுவிட்டார். இந்நிலையில், ராமநாதனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள செண்பகவல்லியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக செண்பகவல்லியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது கள்ளக்காதல் பற்றி அக்கம்பக்கத்தினர் தவறாக பேசியதால், செண்பகவல்லி தனியாக பிரிந்துசென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த ராமநாதன், செண்பகவல்லியின் வீட்டின் முன்பு சென்று, தன்னோடு வந்து வாழுமாறு சண்டைபோட்டுள்ளார், மேலும் தொலைபேசிக் கோபுரம் மீது ஏறிநின்று கொண்டு தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார்.

இவரை பொலிசார் மீட்டனர், சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் ஆகியும், செண்பகவல்லி வராத காரணத்தால் மனமுடைந்த ராமநாதன் செண்பகவல்லியின் தோட்டத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.