சாதி அடிப்படையில் கொடுமைப்படுத்தப்பட்ட தமிழ் மாணவர்!!

1141
குஜராத் மாநிலத்தில் மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர் சாதியின் அடிப்படையில் தனக்கு நேர்ந்த அநியாயம் குறித்து கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்பவர், அகமதாபாத் அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியாக பி.ஜே மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார்.
சாதி, பிராந்தியவாதம் மற்றும் மொழி தொடர்பான பாகுபாட்டினால் தொடர்ந்து மாரிராஜ் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த இவர் தற்கொலைக்கு முயற்சித்து, அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
தன் மீதான பாகுபாடு குறித்து 2015ம் ஆண்டே மருத்துவமனை அதிகாரிகளிடம் மாரிராஜ் புகார் அளித்துள்ளார். ”பாகுபாட்டை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்கிறார். தனது சீனியர்களுக்காக நாற்காலியை விட்டு எழுந்திருக்கச் செல்லப்பட்டதாகவும் அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி வாங்கிவரவும் சொல்லப்பட்டதாகவும் மாரிராஜ் கூறியுள்ளார்.
என்னை, மூத்த மருத்துவர்களுடன் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், நான் எப்போதும் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன்” என்கிறார் அவர். நான் ஒரு அடிமையாக நடத்தப்பட்டேன், அறுவை சிகிச்சை அரங்கிற்கு வெளியே காவலாளி போல நிற்க கட்டாயப்படுத்தப்பட்டேன். என்னைத் தவிர அனைத்துப் பயிற்சி மருத்துவர்களும் கருத்தரங்க வகுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
மாரிராஜ் படிக்கும் துறையின் தலைவர் டாக்டர் பிரசாந்த் மேத்தா, இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கூறியுள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாரிராஜ் அளித்துள்ள புகாரில் டாக்டர் மேத்தா பெயரும் இடம்பெற்றுள்ளது. ‘சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்று வருகிறோம். போதிய ஆதாரங்கள் பெற்ற பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்வோம் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.