வவுனியா தோணிக்கல் பகுதியில் பெண்களுடன் சாமியார் மடக்கிப் பிடிப்பு : நடந்தது என்ன?

1223

வவுனியா தோணிக்கல் மயானத்தில் நேற்று (20.01.2018) மூன்று பெண்களுடன் சாமியாரொருவரை இளைஞர்கள் மடக்கி பிடித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் ஆலயம் ஒன்றை அமைத்து குறி சொல்வது, வசியம் செய்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சாமியாரொருவர் நேற்றைய தினம் (20.01.2108) இரவு பத்து மணியளவில் தோணிக்கல் மயானப்பகுதியில் வைத்து மூன்று இளம் யுவதிகளுடன் மயானப் பூசை எனக் கூறி பெண்களுடன் தகாத முறையில் ஈடுபட முனைந்த வேளையில் பெண்ணொருவர் அவ்விடத்திலிருந்து கதறிய படி வீதிக்கு ஓடிவந்துள்ளார்.

அதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் குறித்த சாமியாரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

எனினும் குறித்த பெண்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முன்வராத காரணத்தால் பொலிஸார் குறித்த சாமியாரை விடுதலை செய்துள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த பகுதிகளில் இச் சாமியார் பல நாட்களாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே இதற்கு யாரும் துணை போக வேண்டாம் என்றும் அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்தனர்.