பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தனியார் பேருந்து ஒன்று சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
அது இலவச சேவையை நடத்தினாலும் உரிய நேரத்துக்குப் புறப்படுவதில் சிக்கல் காணப்படுகிறது.பேருந்தின் ஆசனங்கள் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே அப் பேரூந்து புறப்படுகின்றது. இதனால் காலதாமதம் நிலவுகின்றது.
மணிக்கணக்கில் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால் உரிய மாற்று ஏற்பாடு தேவை என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பில் அரச பேருந்துகளின் அதிகாரிகளுடனும் தனியார் பேருந்துகளின் சங்கத்துடனும் தொடர்பை ஏற்படுத்திய போதும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.







