அமெரிக்காவில் உள்ள உலக புகழ்பெற்ற Guggenheim அருங்காட்சியகம் ஜனாதிபதி டிரம்ப் குடும்பத்துக்கு தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறையை கொடுக்க விரும்புவதாக கூறி அவமானப்படுத்தியுள்ளது.
நியூயோர்க்கில் அமைந்துள்ளது Guggenheim அருங்காட்சியகம். இங்கு பிரபல ஓவியர் Vincent Van Gogh 1888-ல் வரைந்த Landscape With Snow என்ற ஓவியம் இருந்த நிலையில் அது தங்களுக்கு வேண்டும் என வெள்ளை மாளிகை சார்பில் கோரப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கு பதிலாக 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட தங்க கழிப்பறையை டிரம்ப் குடும்பம் வசிக்கும் வெள்ளை மாளிக்கைக்கு தர விரும்புவதாக அருங்காட்சியகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து Guggenheim அருங்காட்சியகம் சார்பில் அதன் பொறுப்பாளர் நேன்சி வெள்ளை மாளிகைக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் எங்களிடம் கழிப்பறை உள்ளது. ஜனாதிபதி டிரம்பும், முதல் பெண் மெலானியாவும் வெள்ளை மாளிகையில் அதை பொருத்த விரும்புகிறார்களா என எழுதப்பட்டுள்ளது.
மேலும் கழிப்பறை நல்ல மதிப்புமிக்க பொருள் எனவும் அதன் பராமரிப்புக்கான வழிமுறைகளை நாங்கள் சொல்லி கொடுப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எழுதிய நேன்சி ஆரம்பம் முதலே டிரம்பை எதிரியாக பார்த்து வந்துள்ளார். ஏற்கனவே தனது வலைப்பக்கத்தில், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மீது டிரம்பின் ஆட்சி தாக்குதல் நடத்துகிறது என விமர்சித்திருந்தார்.
இதோடு டிரம்பின் பயண தடை உத்தரவையும் விமர்சித்திருந்த நேன்சி, ஓவிய சமூகத்திலிருந்து இதற்கு நாம் பதிலடி தரவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்தே பல்வேறு சமயங்களில் நேன்சி அவரை விமர்சித்து வருகிறார். குறித்த தங்க கழிப்பறைக்கு அமெரிக்கா என பெயர் வைக்கப்பட்ட நிலையில் Guggenheim அருங்காட்சியகத்தில் பொது கழிப்பிடத்தில் கடந்தாண்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






