வவுனியாவில் வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு : நோயாளிகள் அவதி!!

881

 
சைட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (30.01.2018) மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் இன்று (30.01.2018) காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவைகள் முழுமையாக இயங்காமையினால் நோயாளர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.​