காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து இலங்கை வீரர் அஞ்சலோ மத்யூஸ் விலகியுள்ளார்.
இலங்கை, வங்கதேசம் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் போது, இலங்கை வீரர் அஞ்சலோ மத்யூஸ் காயமடைந்தார். இதனால் சிட்டகொங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிராக வரும் 8ஆம் திகதி, நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் மத்யூஸ் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், வங்கதேச தொடர் முடிந்தவுடன், மார்ச் 8ஆம் திகதி தொடங்க உள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொடரில், இலங்கை, இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.
மத்யூஸின் காயம் குறித்து இலங்கையின் தலைமை தேர்வாளர் தெரிவிக்கையில், ‘வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு ஆட்டங்களுக்காக மத்யூஸ் விவகாரத்தில், நாங்கள் சிரத்தை எடுக்க விரும்பவில்லை. எங்களுடைய திட்டம் மத்யூஸ், இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இலங்கை அணியின் தலைவராக திசர பெரேரா செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.