இலங்கைப் பூங்காவில் மானை விழுங்கிய மலைப்பாம்பு : நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

1202


இலங்கை தேசிய பூங்காவில் பசியால் தவித்த மலைப்பாம்பு ஒன்று முழு மானை விழுங்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.இலங்கை ஹம்பாந்தோட்டை நகரில் உள்ள தேசிய பூங்காவில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக பசியால் தவிக்கும் மலைப்பாம்புகள், அளவுக்கு அதிகமாக உட்கொண்டு பின்னர் அதை வாந்தியாக எடுத்துவிடும் இயல்பை கொண்டது.ஆனால் கடந்த ஜனவரி 29ம் திகதியன்று 14 அடி நீள மலைப்பாம்பு ஒன்று முழு மானை விழுங்கியுள்ளது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மலைப்பாம்பு, மானை விழுங்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.