உதவியின்றி தவித்த பழம்பெரும் நடிகைக்கு உதவிசெய்த விஷால்!!

917

மருத்துவ உதவியின்றி தவித்துவந்த பழம்பெரும் குணச்சித்திர நடிகை பிந்துகோஷுக்கு நடிகர் விஷால் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் குணச்சித்திர நடிகையான பிந்துகோஷ் சமீப காலமாக உடல்நலம் சரியில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். அது குறித்து அறிய வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், நடிகை பிந்துவிற்கு தன்னால் இயன்ற உதவியை வழங்குவதாக அறிவித்தார்.

அதனடிப்படையில் விஷால் சார்பில் அவரின் நற்பணி இயக்க செயலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் நடிகை பிந்துகோஷை சந்தித்து 5000 ரூபாய் பணத்தை வழங்கியுள்ளார்.

மேலும் மாதந்தோறும் 2500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார், விஷால். அது தவிர நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத பிந்துகோஷை உறுப்பினராக்கியுள்ள விஷால், சங்கம் மூலம் சில உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.