திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளஞரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்றைய தினம் இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தெவனகல – மாவனெல்லை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இரண்டு வருடகாலமாக குறித்த சிறுமியை காதலிப்பதாக கூறி பல இடங்களுக்கு, அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுமியின் பெற்றோர்களினால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்றைய தினம் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..






