வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் கண்ணீர்விட்டு கதறியழுத காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்!!

531

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு அருகே இன்றுடன் (09.02.2018) 351 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சாகும்வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் போது அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு உறவுகளின் கோரிக்கையினை நிராகரிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகுவதையடுத்து இன்று (09.02.2018) காலை தொடக்கம் நாளை வரை இரு நாட்கள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் காணாமற்போன உறவுகள் எவரும் தங்களிடம் இல்லை அவர்கள் விரும்பினால் இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இன்று 351 நாட்கள் ஆகியும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளை வெளிப்படுத்தக்கோரியும் இன்று (09.02.2018) பிற்பகல் 12.30 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்குச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தேங்காய் உடைத்து கண்ணீர் விட்டு அழுது அவர்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள்.

எமது கண்ணீரை வெளிநாடுகள் வந்து பார்க்கவேண்டும், வயதுபோன தாய்மார்கள் பல நாட்களாக உணவு தவிர்ப்பு மேடையிலிருந்து கதறியழுவது உங்களுடைய காதுகளில் கேட்கவில்லையா? ஜரோப்பிய ஒன்றியம் உடனடியாக வந்து எங்களுடைய பிரச்சினைகளில் தலையிடவேண்டும், முருகனும் வேல் எடுத்து போராட்டம் மேற்கொண்டவனே நீதான் முடிவு எடுக்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறியழுனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..