பொய் வழக்கு தொடுத்தவர்களை மாட்டி விட்ட சமூக ஊடகம்!!

335

 
ஹோட்டலில் உண்ட உணவினால் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி ஹோட்டல் நிர்வாகத்தின்மீது வழக்குத் தொடுத்தவர்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட புகைப்படங்களால் சிக்கிக் கொண்டார்கள்.

38 வயது Leon Roberts மற்றும் Jade 27 வயது Muzoka ஆகிய இருவரும் துருக்கியில் உள்ள Belek நகரின் ரிசர்ட் ஒன்றில் விடுமுறையை செலவிடுவதற்காக சென்றனர். பின்னர் ஹோட்டலில் சாப்பிட்டதால் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக்கூறி ஹோட்டல் நிர்வாகத்தின்மீது வழக்குத் தொடர்ந்தனர்.

ஹோட்டல் நிர்வாகம் மற்றும் விடுமுறை ஏற்பாட்டாளர் சார்பாக விசாரணைக்காக Tim Hunter என்னும் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் தனது விசாரணையின்போது பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த புகைப்படங்களைக் கண்டார்.

79 புகைப்படங்களை பதிவேற்றியிருந்த அந்த தம்பதி தங்கள் விடுமுறையைக் குறித்தும், உணவைக்குறித்தும் புகழ்ந்து தள்ளியிருந்தனர். அந்தத் தம்பதி விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்திருப்பதாகவும், உடல் நலம் கெட்டுப்போனதாக பொய் சொல்லியிருப்பதாகவும் Hunter தெரிவித்தார்.

இதற்கிடையில் வழக்குத் தொடர்ந்த தம்பதியர்கள் வழக்கைத் தொடர்ந்து நடத்தாமல் அமைதியாகிவிட்டனர். அவர்கள் பொய் சொல்லி ஏமாற்றியிருப்பது ஊர்ஜிதமாயிற்று.

வழக்கை விசாரித்த நீதிபதி “இது போல் ஏமாற்றும் மற்றவர்களை எச்சரிப்பதற்காகவே இவர்களை சிறையில் தள்ளலாம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தத் தம்பதி மட்டும் பிடிபடாமல் இருந்திருந்தால் தங்களுக்கு 50,000 பவுண்டுகள் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியர்களில் ஐந்தில் ஒருவர் இவ்வாறு இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுப்பது வழக்கமாகி விட்டது. ஏமாற்றுக்காரர்களின் இத்தகைய தொல்லைகள் தொடர்பாக சரியான நேரத்தில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு இந்த ஆண்டு விடுமுறைக் காலத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என ஹோட்டல் நிர்வாகிகளும் விடுமுறை ஏற்பாட்டாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..