புதிய பிரதமருடன் புதிய அரசாங்கத்தை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!!

1022

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள அமைச்சர் ஒருவரை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

நேற்று (14) மாலை அக்கோரிக்கையை எழுத்து மூலமாக ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக அமைப்பின் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.