தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட 19 வயது இளைஞன்!!

454

 
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தில் இளைஞர் ஒருவர் கட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இளைஞனின் சடலத்தை மீட்டதுடன், அவர் தற்கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.

வெலிக்காக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தையா பிரகாஸ் என்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.