வெங்காயத்திற்கு சிசிடிவி கமராவின் உதவியுடன் பலத்த பாதுகாப்பு!!

328


onionஇந்தியாவின் குஜராத்தில் அதிகமாக நடக்கும் வெங்காய திருட்டை தடுக்க சிசிடிவி கமரா மற்றும் பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

வெங்காயத்துக்கு இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வட இந்தியாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது.



குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்பனையாகிறது. இதனால் காய்கறி கடைகளில் வெங்காயம் திருடப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு குஜராத்தில் அதிகமாக நடக்கும் வெங்காய திருட்டை தடுக்க சிசிடிவி கமரா மற்றும் பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.



குஜராத் மாநிலத்தில் மதுவா நகரில் உள்ள சந்தையில் மட்டும் தினமும் சுமார் 250 கிலோ வெங்காயம் திருட்டு போய் விடுவதாக தெரியவந்துள்ளது.



இதனால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதால், இந்த சந்தையில் பல கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இரவு-பகலாக கண்காணிக்கும் பணியில் பாதுகாப்பு காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இது தவிர வெங்காயம் இருப்பு வைக்கப்படும் குடோன்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.