நாயுடன் படுத்துறங்கிய பணிப்பெண் பரிதாப மரணம் : இப்படியும் ஒரு சித்திரவதை!!

705

 
மலேசியாவில் எஜமானரால் கொடுமைப்படுத்தப்பட்ட வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் Adelina, இவர் Penangஇலுள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அவரை வேலைக்கு அமர்த்தியவர்கள் அவருக்கு உணவளிக்காமலும், அவரது காயங்களுக்கு சிகிச்சையளிக்காமலும் அவரைத் துன்புறுத்தியுள்ளனர்.

பத்து நாட்கள் இவ்வாறு துன்புறுத்தப்பட்ட நிலையில், பிப்ரவரி 10 ஆம் திகதி பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இது குறித்து Steven Sim என்னும் அரசியல்வாதியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட போதும், நோய்த்தொற்று அதிகம் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனைதொடர்ந்து 36 வயதுப்பெண் அவரது சகோதரர் மற்றும் அவர்களது 60 வயது தாயார் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலைக் குற்றம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து Steven Sim கூறுகையில், Adelinaவின் மரணம் இந்தோனேசியர்களைக் கோபம் அடையச் செய்துள்ளது. நான் சென்று பார்த்த போது Adelinaவின் நிலைமை மோசமாக இருந்தது, அவரது கைகளிலும் கால்களிலும் பலத்த காயங்கள் காணப்பட்டன.

கடந்த மாதம் அவர் வீட்டுக்கு வெளியே நாயுடன் படுத்து உறங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார், அவருக்கு உணவளிக்கப்படவில்லை, அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில், நாய்க்கடிகள், உணவுப்பற்றாக்குறை போன்றவை காரணமாக இருக்கலாம் என்று இந்தோனேசிய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்ணளவாக 2.5 மில்லியன் இந்தோனேசியர்கள் மலேசியாவில் வேலை செய்கிறார்கள் என்றும், அவர்களில் பாதிபேர் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.