எனக்கும் முகேஷிற்கும் விவகாரத்து நடக்கவில்லை : கொந்தளிக்கும் சரிதா!!

454

Actress Saritha Latest Stillsஎனக்கும் முகேஷிற்கும் இன்னும் விவகாரத்து கிடைக்காத நிலையில் என் அனுமதியின்றி இன்னொரு பெண்ணை திருமணம் செய்திருப்பது சட்டப்படி தவறு என்று சரிதா கூறியுள்ளார்.

முகேஷுக்கும் நடிகை சரிதாவுக்கும் 1989ல் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இருவரும் 2007ல் விவாகரத்து பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து முகேஷ் பிரபல நடன கலைஞரான தேவிகாவை நேற்று 2வது திருமணம் செய்தார். இந்நிலையில் எனக்கும் முகேஷிற்கும் இன்னும் விவாகரத்து கிடைக்காத நிலையில் என் அனுமதியின்றி இன்னொரு பெண்ணை முகேஷ் திருமணம் செய்திருப்பது சட்டப்படி தவறு என்றும் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகை சரிதா விடுத்துள்ள அறிக்கையில்,பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகுந்த வலியோடும் அதிர்ச்சியோடும் இந்த செய்திக் குறிப்பை தருகிறேன்.

மருத்துவம் படிக்கும் என் மகன் ஷ்ரவன் முகேஷுடன் இப்போது நான் துபாயில் இருக்கிறேன். எனக்கும் நடிகர் முகேஷ் மாதவனுக்கும் கடந்த 2.9.1988ல் கேரளாவில் திருமணம் நடந்தது.
ஆனால் இப்போது அதே முகேஷுக்கும் மெதில் தேவிகா என்பவருக்கும் கேரளாவில் பதிவுத் திருமணம் நடந்ததாக வந்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எங்கள் திருமணம் சட்டப்படி இன்னும் ரத்து செய்யப்படாத நிலையில் அந்தப் பெண்ணை மணந்திருக்கிறார் முகேஷ். இது சட்டவிரோதம். என் மகன்கள் ஷ்ரவன் முகேஷ் (24) மற்றும் தேஜாஸ் முகேஷ் (20) இருவரையும் நான்தான் வளர்த்து வருகிறேன்.

மேலும் விவாகரத்து குறித்து நீதிமன்றம் எனக்கு எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. திருமணத்துக்குப் பிறகு எத்தனை நல்ல டீசன்டான வாய்ப்புகள் வந்தும் அவற்றில் நடிக்க என்னை முகேஷ் அனுமதிக்கவில்லை.

இதனால் பல நல்ல வாய்ப்புகளை இழந்தேன். அதுமட்டுமல்ல முகேஷ் என்னை மன ரீதியாகவும் ,உடல் ரீதியாகவும் செய்த சித்திரவதைகள் கொஞ்சமல்ல. குடித்துவிட்டு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு என்னையும் துன்புறுத்தினார். இதெல்லாம் என் குழந்தைகளை மனதளவில் பாதித்ததால் அவர்களை அழைத்துக் கொண்டு 2007ல் முகேஷைப் பிரிந்து வந்துவிட்டேன்.

உடனடியாக இந்து திருமணச் சட்டம் பிரிவு 13 (1) மற்றும் 13 (i-a) கீழ் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். ஆனால் முகேஷ் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் எனக்கு விவாகரத்து தர பிடிவாதமாக மறுத்தார். மேலும் என் மனுவுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்தார்.

ஆனால் பின்னர் அவரே பரஸ்பர விவாகரத்து செய்து கொள்ளலாம் என என்னிடம் கேட்டுக் கொண்டார். வெளியில் சொல்ல முடியாத முகேஷின் டார்ச்சர் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பரஸ்பர விவாகரத்து சம்மதித்தேன்.

2009ல் பரஸ்பர விவாகரத்துக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தோம். ஆனால் அதன் பிறகு எந்த வாய்தாவிலும் அவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகவே இல்லை.

ஆனால் நான் மட்டும் வெளிநாட்டிலிருந்து ஒவ்வொரு முறையும் வந்து சென்றேன். தொடர்ச்சியாக முகேஷ் வராததால் நான் பரஸ்பர விவாகரத்து வழக்கை 2010ல் வாபஸ் பெற்றேன். எனவே அதன் பிறகு முகேஷுக்கு விவாகரத்து குறித்து எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை.

நான் இந்தியாவில் இல்லை என்பதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு முதல் மனைவி நான் இருக்கும்போதே சட்டவிரோதமாக இரண்டாம் திருமணம் செய்துள்ளார் முகேஷ்.

இதை நான் சும்மா விடப் போவதில்லை. சகல வித நடவடிக்கைகளையும் எடுக்கப் போகிறேன். முகேஷ் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறேன் என்று கூறியுள்ளார்.