இப்படியும் ஒரு ஆட்டோ ஓட்டுனர்!!

404


autoமகாராஷ்டிராவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது வாகனத்தில் பெண் பயணி விட்டுச்சென்ற தங்க நகைகள் வைத்திருந்த பையை திரும்ப ஒப்படைத்துள்ளார்.

வசாய் அடுத்த நைகாவ் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ் பாட்டீல் (27). ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் நடுத்தர வயது கொண்ட பெண் தனது குழந்தையுடன் வசாய் அடுத்த நைகாவ் ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சவாரி செய்துள்ளார்.



நைகாவ் ரயில் நிலையம் அருகே வந்ததும் ரயிலை பிடிக்கும் அவசரத்தில் அந்த பெண் தனது கைப்பையை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு சென்று விட்டார். அந்த பையில் 10 பவுண் நகை, 2.5 பவுண் சங்கிலி, 3 தங்க மோதிரங்கள் மற்றும் கைப்பேசி ஆகியவை இருந்துள்ளது.

அவற்றின் மொத்த மதிப்பு 5 லட்சம். அந்த பெண் பயணி கீழே இறங்கியதும் ஆட்டோவை ஓட்டுனர் சிறிது தூரம் சென்றதும் பையில் இருந்த கைப்பேசி ஒலித்தது. இதனைத் தொடர்ந்து ஓட்டுனர் ராஜேஷ் திரும்பி பார்த்தபோது பின்புற இருக்கையில் பை இருந்தது, அதை திறந்து பாத்தபோது நகைகளும், கைப்பேசியும் இருந்துள்ளது.



கைப்பேசியை கையில் எடுத்து பேசியுள்ளார். எதிர்முனையில் பையை தவறவிட்ட பெண் பேசியுள்ளார். ரயில்வே பிளாட்பாரத்துக்கு சென்ற பிறகு அந்த பெண்ணுக்கு பை பற்றிய நினைவு வந்திருக்கிறது. உடனடியாக அருகிலிருந்த பொது தொலைபேசியில் இருந்து கைப்பேசிக்கு அழைப்பு செய்திருக்கிறார்.



கைப்பேசியை எடுத்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து பையை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அந்த பெண் வந்த பிறகு பையை அதிலிருந்த தங்க நகைகளுடன் பத்திரமாக ஒப்படைத்தார்.


ஜெயேஷ் பாட்டீலின் நேர்மையை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் ஜெயேஷ் கூறுகையில் நேர்மையான வழியில் மட்டுமே சம்பாதிக்குமாறு எனது பெற்றோர் எனக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள் என்றும் எனது குழந்தைகளுக்கும் அதையேதான் கற்றுத் தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.