நெடுங்கேணி பொலிஸ் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

477

 

n2வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவரை நெடுங்கேணி பொலிஸார் தாக்கியதை கண்டித்து வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கையில்,

இன்று காலை நெடுங்கேணி பிரதேச விளையாட்டு விழா இடம்பெற இருந்த சமயம் மைதானத்தில் இருந்து தனது விடுதிக்கு சென்ற சமயம் பொலிஸார் மறித்தபோதிலும் அதனை அவதானிக்காத நிலையில் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது தனது விடுதிக்கு சென்றபோது பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் அவரை விடுத்திக்குள் வைத்து தாக்கியதுடன் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பொலிஸாரிடம் கலந்துரையாடுவதற்காக சென்ற பிரதேச செயலாளரை நிலையத்தின் பொறுப்பதிகாரி நீண்ட நேரம் சந்திக்காது காத்திருக்க வைத்ததுடன் உதவி பிரதேச செயலாளரை போக்குவரத்து பொலிஸார் தரக்குறைவாக நடத்தனர் எனவே நாம் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம் என தெரிவித்தனர்.

இதேவேளை, வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் அதிகாரிக்கும் இடையில் இச்சம்பவம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.