புது படங்களில் நடிக்க மறுப்பு : காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகல்!!

541

kajal agarwal cute stills from brindaavanamநடிகை காஜல்அகர்வால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் இன்று பரபரப்பு தகவல் வெளியானது.

காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் படங்கள் இல்லை. நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்துவிட்டார். தமிழில் மட்டும் விஜய் ஜோடியாக ஜில்லா படத்தில் நடிக்கிறார். தெலுங்கு படங்களில் நடிப்பதை மட்டும் நிறுத்துவிட்டார் என்றும் தமிழில் தொடர்ந்து நடிப்பார் என்றும் பேசப்பட்டது.

ஆனால் தற்போது சினிமாவை விட்டு விலக போகிறார் என்று கூறப்படுகிறது. ஜில்லா படத்துக்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்கவும் அவர் ஒப்பந்தம் ஆகவில்லை. காஜல்அகர்வால் தங்கை நிஷாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. எனவே காஜல்அகர்வாலும் விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி வீட்டில் வற்புறுத்துகிறார்களாம்.

எனவேதான் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம்.