வவுனியா பிரதேச செயலகத்தால் பூவரசங்குளத்தில் நடாத்தப்பட்ட முப்பெரும் நிகழ்வு!!(படங்கள்)

604

வவுனியா பிரதேச செயலகத்தால் முதியோர் தினம், சிறுவர்தினம், விசேட தேவைக்குட்பட்டோர் தினம் போன்ற முப்பெரும் நிகழ்வு நேற்று வவுனியா பூவரசன்குள மகாவித்தியாலையத்தில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க உதயராசா , வவுனியா பிரதேசசபை தலைவர் திரு சிவலிங்கம் , ஓகன் நிறுவன தலைவர் திரு சுப்பிரமணியம் உட்பட பல முக்கிய அதிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி விழாவில் முதியோருக்கான நிகழ்சிகளும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் வவுனியா பிரதேசத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் பிரதேசமட்டங்களிலும் தேசியமட்டங்களிலும் தெரிவான நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் நிகழ்வுகளுக்கு பாராட்டு தெரிவித்தும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து விசேட தேவைக்கு உட்பட்டோரின் பல நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் அவர்களின் நிகழ்வுகளுக்கும் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

மேலும் பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்களும் வழங்கப்பட்டன தொடர்ந்து வவுனியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அதிகூடிய வயதுடைய முதியோர்களை பாராட்டி பொன்னாடை போர்த்து கெளரவப்படுத்தியதுடன் முதியோர் சங்கங்களுக்கு பிரதேச செயலாளரால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

2 3 8 7 6 5 4 9 10 11 12 13 14 15 16