வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் ஆண்டு மகோற்சவ பெருவிழா (20.02.2018) செவ்வாய்க்கிழமை பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது. .மேற்படி மகோற்சவம் ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.
மேற்படி மகோற்சவத்தில்
23.02.2018 வெள்ளிகிழமையன்று கற்பூர சட்டி திருவிழா
27.02.2018 செவ்வாய்கிழமையன்று சப்பர திருவிழா
28.02.2018 புதன்கிழமையன்று தேர்த்திருவிழா
01.03.2018 வியாழக்கிழமையன்று தீர்த்த திருவிழா
02.03.2018 வெள்ளிகிழமையன்று பூங்காவன திருவிழாவும் இடம்பெறுகின்றது .














