ஒன்றாக தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள் : இறப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோ!!

576

ரஷ்யாவில் குடும்பத்தாருக்கு வீடியோ அனுப்பிய பின்னர் இரண்டு சகோதரிகள் ஒன்றாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Izhevsk நகரத்தில் வசித்து வந்த Maria Vinogradova(12) மற்றும் Anastasia Svetozarova(15) ஆகிய ஒன்றுவிட்ட சகோதரிகள் தான் இந்த துயரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இருவரில் Maria என்ற சிறுமி அவரை விட வயதில் குறைவான டிமிட்ரி என்பவரை காதலித்து வந்த நிலையில் குறித்த சிறுமியின் தாய், அவளை பெண்கள் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கி வந்துள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ள Maria, தன் சகோதரியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில், தன் காதலனின் புகைப்படத்தை வெளியிட்டு அதில் “என்னை மன்னித்துவிடு. ஐ லவ் யூ. என்னை விட உனக்கு வேறு நல்ல பெண் கிடைப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன் குடும்பத்தாருக்கு பதிவு செய்திருந்த வீடியோவில், “அனைவருக்கும் குட்பை, உங்கள அனைவரையும் நான் மிகவும் காதலிக்கிறேன், அதுவே உண்மை” என உருக்கமாக கூறியுள்ளார்.

இதன்பின் தற்கொலை செய்து கொண்ட அந்த சகோதரிகள் 10வது மாடியில் இருந்து குதித்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், “புளு வேல்” போன்ற கொடிய விளையாட்டு ஏதும் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் சகோதரிகளின் செல்ஃபோன் மற்றும் கணினி உள்ளிட்டவற்றை பொலிசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.