கனடிய பிரதமரின் புறக்கணிப்பு புலிகளின் அழுத்தங்களால் மேற்கொள்ளப்பட்டது : நிமல் சிறிபால டி சில்வா

408

nimalகனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கவுள்ள போதும் எந்த ஒரு கனேடிய பிரஜையும் இந்த மாநாட்டை புறக்கணிப்பதை விரும்பவில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கனடாவின் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி, ஹாப்பரின் முடிவை கண்டித்துள்ளார். இந்தநிலையில் கனேடிய பிரதமரின் இந்த புறக்கணிப்பு முடிவு அங்கு வாழும் புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையின் சண்டே ஒப்சேவர் என்ற அரசாங்க வார செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

கனேடிய பிரதமர் இந்த முடிவை எடுக்கும் முன்னர் தமது நாட்டினதும் பிராந்தியத்தினதும் நலன்களை கருத்திற்கொண்டிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை புதிதாக தெரிவுசெய்யப்படடுள்ள வடக்கு மாகாணசபை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் போது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.