நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்ட தொகுப்பாளினியின் பிரசவம்!!

1267

 
அமெரிக்காவில் வானொலி தொகுப்பாளினிக்கு திடீரென குழந்தை பிறந்த நிலையில் அவரின் பிரசவம் வானொலியில் நேரடியாக ஒலிபரப்பாகியுள்ளது. சென்லூசிஸ் நகரில் உள்ள த ஆர்ச் என்னும் தனியார் வானொலி நிலையத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

காசிடே ப்ரோக்டர் என்ற பெண் த ஆர்ச் வானொலியில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்த நிலையில் செவ்வாய் காலை நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காசிடேவின் பிரசவத்தை எல்லோரும் கேட்க வேண்டும் என்ற வித்தியாசமான நோக்கில் அவரின் பிரசவத்தை உயிர்ப்போடு வானொலியில் ஒலிபரப்ப முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் வானொலி நிறுவனத்தின் தலைவர் ஸ்காட் ரோடி அதற்கு ஏற்பாடு செய்தார்.


இதையடுத்து காசிடேவின் பிரசவம் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. காலை 7.45 மணிக்கு அழகான ஆண் குழந்தையை காசிடே பெற்றெடுத்த நிலையில் அதற்கு ஜேம்சன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.