பாகிஸ்தானின் இரண்டு போர்க்கப்பல்கள் நான்கு நாள் நல்லெண்ண பயணத்தின் அடிப்படையில் கொழும்பு துறைமுகத்துக்கு இன்று வருகை தரவுள்ளன.
பிஎன்எஸ் என்ஏஎஸ்ஆர் மற்றும் கஹாய்பார் என்ற இரண்டு கப்பல்களே இலங்கை வரவுள்ளன. இதில் முதலாவது கப்பல் உதவி செய்தல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் கப்பலாகும்.
இந்த கப்பல் 2004 ஆம் ஆண்டு மாலைத்தீவில் சுனாமி மீட்புப்பணிகளில் ஈடுபட்ட கப்பலாகும். இரண்டாவது கப்பலானது பாகிஸ்தான் கடற்படையில் முக்கிய பங்கை வகிக்கிறது.