வவுனியாவில் பட்டப்பகலில் நகைகள் கொள்ளை : பொலிஸ் விசாரணை தீவிரம்!!

1799

 
வவுனியா பட்டாணிச்சூர் 2ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (23.02.2018) மதியம் 11 மணியளவில் நகைகள் திருடப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பட்டாணிச்சூர் 2ம் ஒழுங்கையில் சிறிதரன் மலர்வதனி என்பவர் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இன்று மதியம் 11 மணியளவில் விட்டினை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்ற சமயத்தில் வீட்டின் கதவினை திறந்து அலுமாரியினையுடைத்து அதனுள் இருந்த சுமார் 9 பவுண் நகைளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

2.15 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கபட்டதை அவதானித்த குறித்த பெண் உடனடியாக அவரச தொலைபேசியிலக்கமான 119க்கு அழைப்பினை ஏற்படுத்தி சம்பவத்தினை தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.