ஒரே டுவிட்டால் 1.3 பில்லியன் டொலர் இழப்பு!!

563

அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலம், கிம் கர்தஷியனின் தங்கை கெய்லி ஜென்னர் பதிவிட்ட ஒரு ட்விட்டால், ஸ்னாப்சேட் நிறுவனத்திற்கு சுமார் 1.3 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கெய்லி ஜென்னர், அமெரிக்காவின் மொடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர், பிரபல தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்தஷியனின் தங்கை, சமூக வலைதளத்தில் இவரை பல கோடி பேர் பின் தொடர்கின்றனர்.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளம் ஸ்னாப்சேட். இந்த வலைதளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
ஆனால் இதனை பயன்படுத்துபவர்களில் பலர், இந்த மாற்றம் குறித்து அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கெய்லி ஜென்னர், தனது ஸ்னாப்சேட் கணக்கில், இனி தான் ஸ்னாப்சேட் செயலியை பயன்படுத்தப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

இதற்கு காரணம், அவர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதனால் அவரால் ஸ்னாப்சேட்டை பயன்படுத்த நேரம் கிடைக்காது என்றும், ஸ்னாப்சேட்டில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் கெய்லிக்கு பிடிக்காததாலேயே, அவர் அதனை பயன்படுத்த போவதில்லை என தெரிவித்துள்ளார் என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவின.

எனினும், இரண்டாவதாக கூறப்பட்ட காரணமே முதன்மையானதாக இருக்கும் என கருதிய கெய்லியை பின் தொடர்வோர், அதனை உபயோகிப்பதை நிறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, வியாழக்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும், ஸ்னாப்சேட்டின் பங்குமதிப்பு அமெரிக்கப் பங்கு சந்தையில் 6.1 சதவிதம் வரையில் குறைந்தது. இதனால், அந்நிறுவனத்திற்கு சுமார் 1.3 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.