தம்புள்ளை – தம்மன்னா எல பிரதேசத்தில் உள்ள மரக்கறி மற்றும் பழக்கடைகள் ஆறு திடீர் தீ விபத்தின் காரணமாக அழிவடைந்துள்ளன. நேற்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தம்புள்ளை பொலிஸ், தம்புள்ளை நகரசபை தீயணைப்பு படையினர், மின்சார சபை மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை அணைத்துள்ளனர். எனினும் விற்பனை நிலையங்கள் தீயினால் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ளன.
தீ விபத்தில் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட் சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. தம்புள்ளை பொலிஸார் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.