தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் இலங்கை செல்ல தப்பிச் செல்ல முயன்ற நான்கு அகதிகளை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கை மன்னார், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் 37. இவரது மனைவி சுதா 33, மற்றும் அனோஜன் 35, ஏசுராஜ் 32 ஆகிய 4 பேரும் 1990 மற்றும் 2006ல் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.
இவர்கள் அறந்தாங்கி, ஈரோடு, திருப்பூர் முகாமில் தங்கினர். பின் முகாமில் இருந்து வெளியேறி கோவையில் பெயிண்டிங் வேலை செய்தனர்.
இதில் போதுமான வருமானம் இல்லாததால் மீண்டும் தனுஷ்கோடி வழியாக கள்ளபடகில் இலங்கை செல்ல திட்டமிட்டனர். இதற்காக முகவரிடம் 35 ஆயிரம் வாடகை பேசி முன்பணம் 5 ஆயிரம் கொடுத்துள்ளனர்.
நேற்று தனுஷ்கோடி பாறையடி எனும் கடற்கரைக்கு அகதிகள் 4 பேரும் வந்தனர். பொலிஸார் 4 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தப்பிச் சென்ற தனுஷ்கோடி முகவர் முருகேசன் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து அகதிகள் கூறியதாவது..
பெயிண்டிங் வேலையில் போதுமான வருமானம் இல்லாமல் அவதிபட்டோம். அதனால் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை சென்று, கடவுச்சீட்டு பெற்று டுபாய் செல்ல முடிவெடுத்ததாக தெரிவித்தனர்.