பிரித்தானியாவில் போதை மருந்து கடத்தல் தொடர்பில் கைதான நபர் ஒருவர் கடந்த 37 நாட்களாக மலம் கழிக்க மறுத்து வருவதாக எசெக்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் போதை மருந்து கடத்தல் தொடர்பாக 24 வயது Lamarr Chambers என்ற இளைஞரை பொலிசார் கைது செய்தனர். கடந்த ஜனவரி 17 ஆம் திகதி கைதாவதற்கு முன்னர் குறித்த இளைஞர் போதை மருந்து பொட்டலங்களை விழுங்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆதாரம் திரட்டும் நோக்கில் அவர் மலம் கழிக்கும் வரை பொலிசார் காத்திருக்கின்றனர். இதுவரை Lamarr தொடர்பில் தகவல் வெளியிட்டு வந்த பொலிசார், அவர் தொடர்பில் உறுதியான தகவல் திரட்டப்பட்ட பின்னரே அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இதேவகையில் கைதான நபர் ஒருவர் 23 நாட்கள் மலம் கழிக்காமல் அடம்பிடித்த சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






