கணவர் இறந்த சில மாதத்தில் அவர் தம்பியை திருமணம் செய்து கொண்ட மனைவி!!

896

 
பிரித்தானியாவில் உயிரிழந்த கணவரின் இறுதிசடங்கில் பார்த்த அவரது ஒன்றுவிட்ட சகோதரரை மனைவி பல ஆண்டுகளுக்கு முன்னர் மணந்த நிலையில் அந்த நினைவுகளை தற்போது பகிர்ந்துள்ளார்.

பிரட்போர்டு நகரை சேர்ந்தவர் ஜூடி ஹன்சன் (60). இவருக்கு கடந்த 1984-ல் டிம் என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் 1986 நவம்பர் மாதம் கார் விபத்தில் டிம் மரணமடைந்தார்.

அப்போது டிம்மின் இறுதிசடங்குக்கு உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தனர். அப்போது தான் முதல் முறையாக டிம்-மின் ஒன்றுவிட்ட சகோதரர் டேவ்-ஐ ஜூடி பார்த்துள்ளார்.

இதையடுத்து இருவரும் நட்பாகி பின்னர் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. டிம் உயிரிழந்து சரியாக ஆறு மாதம் கழித்து டேவ்-ஐ ஜூடி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. இது குறித்து தற்போது 60 வயதாகும் ஜூடி கூறுகையில், டின் இறந்தவுடன் வாழ்க்கையே இருட்டாக எனக்கு மாறிவிட்டது. அப்போது டேவ் தான் எனக்கு ஆறுதலாக இருந்தார், டிம்மும், டேவும் உறவினர்கள் என்பதால் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தார்கள், கருப்பு முடி, நல்ல வெள்ளை பற்கள் மற்றும் அழகான கண்கள் என ஒற்றுமை இருந்தது.

இதுவும் அவர் மீது காதல் வர எனக்கு காரணமாக இருந்தது. என் குழந்தைகளையும் டேவ் அன்பாக பார்த்து கொண்டார் என கூறியுள்ளார்.

ஆனாலும் டேவும், ஜூடியும் 20 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின்னர் கடந்த 2007-ல் பிரிந்துவிட்டார்கள். இருந்தபோதும் தற்போது வரை இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.