கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் : பயணிகள் பாதிப்பு!!

1086
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் உரிய நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கவில்லை. இதன்காரணமாக அங்கு குழப்பமான நிலை ஏற்பட்டதுடன், பயணிகள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
நேற்றிரவு மற்றும் இன்று காலை வேளையில் விமானங்கள் உரிய நேரத்தில் விமான நிலையத்தை விட்டு செல்லாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 8 மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் பயணிகள் விமான நிலையத்தில் தங்கியிருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு விமானங்கள் தாமதமாகியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.