வவுனியாவில் வசதியற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!!

694

 
வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக இன்று (26.02) பிற்பகல் 3 மணியளவில் வவுனியா பிரதேச செயலகத்தில் வைத்து வசதியற்ற நான்கு மாணவர்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து மாணவர்கள் நான்கு பேருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், சமூக ஆர்வலர் விக்னா, மாணிக்கம் ஜெகன், பிரதேச சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜெயக்கெனடி ஆகியோர் கலந்துகொண்டனர்.