தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இரண்டு பேர் இன்று அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், இன்று அமெரிக்கா செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு அவர்கள் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு மேலதிகமாக அமெரிக்காவின் அரச உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.