அமெரிக்காவில் பச்சிளம் குழந்தையை கொன்று அதன் சடலத்துடன் ஷொப்பிங் சென்ற இளம் தாயாருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சேர்ந்தவர் டியோனா ரோட்ரிக்ஸ். இவரே 4 ஆண்டுகளுக்கு முன்னர் தமக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை கழிவறையில் வைத்து கொலை செய்து அதன் பின்னர் ஏதும் அறியாதது போன்று மன்ஹாட்டன் பகுதியில் இருக்கும் ஷொப்பிங் வளாகம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
ஷொப்பிங் சென்றவர் தனது குழந்தையின் சடலத்தையும் தனது கைப்பையில் கூடவே எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால் குறித்த ஷொப்பிங் வளாகத்தில் திருட்டு சம்பவம் ஒன்றில் சிக்கிய அவரை பொலிசார் விசாரித்தபோது நடந்த சோதனையில், அவரது பையில் இருந்து குழந்தையின் சடலத்தை பொலிசார் மீட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது 21 வயதாகும் டியோனாவுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, குறித்த தீர்ப்பானது தனது வாழ்க்கையை ஒரு நாள் கூட வாழாமல் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு கிடைக்கும் நீதியாக இருக்கட்டும் என நீதிபதி தீர்ப்பின் போது தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட குழந்தையானது டியோனாவின் 3வது பிள்ளையாகும். அவருக்கு 14 வயது இருக்கும்போது முதல் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தை இறந்தே பிறந்துள்ளது.







